19th September 2020 18:00:49 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 222 வது பிரிகேட்டின் படையினருக்கு தேடல் மற்றும் மீட்பு குழுவிற்கான கள பயிற்சி 2020 செப்டம்பர் மாதம் 18 ம் திகதி சேருநுவர சிறிமங்கல கிராமத்தில் நடைப்பெற்றது.
எதிர்வரும் அடை மழைக் காலத்தை கருத்தில் கொண்டு மீட்பு நடவ டிக்கைகள் ஒத்திகை செய்வதன் அவசியத்தை உணர்ந்து 22வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியாவின் வழிகாட்டுதலின் கீழ் 222வது பிரிகேட் தளபதி கேணல் விராஜ் வீரரத்ன அவர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருகோணமலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரும் பங்கேற்றார். affiliate link trace | Sneaker & Lifestyle News