Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2020 08:00:41 Hours

யாழ்ப்பாண படையினரின் ஏற்பாட்டில் 12 சிவில் அணிகளிடையே காற்பந்து போட்டி

யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் யாழ் குடா நாட்டு திறமையான இளைஞர்களிடையே நல்லெண்ணம், ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான நல்லிணக்க காற்பந்து போட்டி - 2020 யை நடாத்தியது.

51வது படைப்பிரிவு மற்றும் 513 பிரிகேட் ஆகியன ஏற்பாடு செய்திருந்த இம் மாபெரும் போட்டியில் குடாநாட்டின் 12 கால்பந்தாட்ட அணிகள் போட்டியிட்டன இறுதிப் போட்டிகள் யாழ் அரியலை கழக மைதானத்தில் பெருந்தொகையான காற்பந்து ரசிகர்கள் மத்தியில் சனிக்கிழமை (19) நடைப்பெற்றது.

இம் மாபெரும் போட்டி தொடரில் இறுதிப் சுற்றுக்கு குருநகர், நாவத்துறை, பண்டத்தரிப்பு , பெரியவிழான், இளவாலை மற்றும் பலாலி பகுதியைச் சேர்ந்த 12 புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணிகளின் வீரர்கள் போட்டியிட்டனர். கடும் போட்டிகளின் பின்னர் குருநகர் பாடும் மீன் கால்பந்து அணியும் நாவத்துறை புனித நிக்கோலோ விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இறுதியில் குருநகர் பாடும் மீன் கால்பந்தாட்ட அணி கோப்பையை 2 - 1 கோல்களினால் வென்றது.

பரிசளிப்பு விழாவில் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இறுதி போட்டியின் பார்வையாளர்களாக கலந்துக்கொண்டனர். போட்டிக்கான அனுசரணையினை டான் டிவியின் பணிப்பாளர்களான திரு பவானீதன் பவன் மற்றும் திரு எஸ்.எஸ்.குகநாதன் ஆகியோர் வழங்கியிருந்தனர். latest Nike release | nike air speed turf rose gold price per gram