Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2020 12:08:26 Hours

22 நபர்கள் பூரணசுகமடைந்து வீடு செல்லல்- நொப்கோ தெரிவிப்பு

இன்று 18 ஆம் திகதிய அறிக்கையின்பிரகாரம், ஐந்து வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் கொவிட்-19 தொற்றுக்கள்ளாகியுள்ளனர். அவர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்,கட்டார்,மடக்கஸ்கர்,ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்து புளூ வோட்டர்,ஹோட்டல் ஜெட்விங் புளு,ஹோட்டல் டொல்பின், சேவை பயிற்சி பாடசாலை கண்னொருவை மற்றும் பயிற்சி பாடசாலை குண்டசாலை ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

18 ஆம் திகதி காலை 6 மணியளவில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களின் முழு விபரம் 649 பேர் இவர்களில் 528 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள், 48 பேர் நிர்வாக உறுப்பினர்கள், 5 பேர் விருந்தின அங்கத்தவர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடையில் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புடைய ஒருவர் உட்பட நெருங்கிய தொடர்புடையவர்களாவர்.

இன்று காலைEK 648 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து 22 பயணிகளும், தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானத்தின் மூலம் 52 பயணிகளும், UL 455 விமானத்தின் மூலம் ஜப்பானில் இருந்து 30 பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானத்தின் மூலம் 07 பயணிகளும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகித்து வரும் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு 320 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களில் மிஹிந்தலை 01, எஸ்எல்ஏஎப் பாலாலி 62, எஸ்எல்ஏஎப் முல்லைத்தீவு 08,ஹோட்டல் ஜெட்விங் புளு 41, பியகம விலேஜ் 58 , டிக்வல ரிசோட் 61 பெஸ்கோ விலா சீகிரியா 25, ஆயுர்வேத கிவ்சி ராஜகிரிய 05 மந்தர ரிசோட் மிரிஸ்ஸ 07 ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலில் தனிமைப்படித்தப்பட்வர்களாவர்.

18 ஆம் திகதி காலை இதுவரைக்கும் தனிமைப்படுத்தலின் பின்பு 42582 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5895 பேர் முப்படையினரால் நிர்வகித்து வரும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 17 ஆம் திகதி நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கை 1640 ஆகும். முழுமையாக நாடு முழுவதும் இது வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 262378 ஆகும்.

இன்று 18 ஆம் திகதி கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 638 நபர்கள் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 11 பேர் ஆகும்.வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தவிர வேறு எந்த கொரோனா தொற்று சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்க உதவவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) short url link | Air Jordan