19th September 2020 17:00:49 Hours
லயன்ஸ் கிளப் 306-1 மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கொழும்பு கேம்பிரிட்ஜின் லயன் துவான் போரா ஆகிய கழகங்களினால் வழங்கப்பட்ட அனுசரணை மூலம், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் மூன்று இராணுவ மகளிர் படையினரின் உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள், பாகங்கள் மற்றும் பிற பாகங்களானது வியாழக்கிழமை 17 ஆம் திகதி வழங்கப்பட்டன.
லயன்ஸ் கிளப்பினால் வழங்கப்பட்ட குறித்த திட்டத்தினை மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க அவர்கள் நெருக்கமாக மேற்பார்வையிட்டார். இதில் சக்கர நாற்காலி, மூக்கு கண்ணாடி மற்றும் கண் லென்ஸ்கள் போன்றவை அடங்கியிருந்தன, மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் நலிந்த மகாவித்தான அவர்கள் இது தொடர்பாக முன்னர் ஒருங்கிணைப்பைச் செய்திருந்தார்.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவிநிலை பிரிகேடியர் தம்மி ஹேவகே, மற்றும் சில அதிகாரிகள் உட்பட பலர் இவ்விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர். Sports Shoes | Yeezy Boost 350 Trainers