Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2020 21:00:04 Hours

தேசிய மற்றும் பாடசாலை அளவிலான விளையாட்டு வீரர்களின் விளையாட்டு நிபுணத்துவம் தொடர்பாக கலந்துரையாடல்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பில் தேசிய மற்றும் பாடசாலை அளவிலான விளையாட்டு வீரர்களிடையே வசதிகள் மற்றும் விளையாட்டு நிபுணத்துவம் தொடர்பாக தொழில்முறை அறிவு, வசதிகள் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாரால் மேற் கொள்ளவேண்டிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவர்கள் இலங்கை உடற் பயிற்ச்சி மற்றும் விளையாட்டுகளில் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குனரத்ன, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்ர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் நிசாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயா மார்ஷல் சுமன்கல டயஸ், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் , நாட்டின் அனைத்து 25 விளையாட்டு பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கும், தேசிய நிகழ்வுகளுக்கு வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்காக மற்றும் முப்படையினர் மற்றும் பொலிஸாரிடையே காணப்படும் விளையாட்டு மற்றும் தடகளத்தில் ஈடுபாடு, இணையற்ற தொழில்முறை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொர்பாக என்று விவாதித்தனர். இந்த திட்டத்திற்கு தங்களது அதிகபட்ச ஆதரவை வழங்கவும், நாடு முழுவதும் தடகளத்தை உயர்த்த முயற்சிக்க முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் துறையையும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

விளையாட்டு மைதானங்களை பராமரித்தல், விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகளுக்கு சிறந்த சூழலை வழங்க பாடசாலைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கௌரவ அமைச்சர் நீண்ட கால முதலீடாக காணப்படும் விளையாட்டுகளில் இத்தகைய வசதிகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விரிவாகக் கூறினார். இந்த கலந்துரையாடலிள் தேசிய விளையாட்டுக் குழுவின் பல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் பங்குபற்றினர். Best jordan Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!