19th September 2020 19:14:55 Hours
வவுனியாவில் உள்ள மாவட்ட மருத்துவ அலுவலகம் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் நிமித்தம் 561 ஆவது காலாட்படை தலைமையகத்தின் படையினர் மற்றும் 7 பொலிஸ் அதிகாரிகளால் செப்டெம்பர் 15 ஆம் திகதி வவுனியா மாவட்ட மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு இரத்த தானம் நன்கொடையாக வழங்கினர்.
அதற்கமைய, 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் கீழ் இயங்கும், 561 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில’ உள்ள 17 ஆவது விஜயபாகு காலாட் படை படையணியின் 70 படையினர் மற்றும் நெடுங்கேணி சாலை அபிவிருத்தி அதிகாரத்தின் பங்களாவில், ஏழு பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வவுனியா மருத்துவமனை மற்றும் வன்னி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் நலன் கருதி இரத்ததானம் வழங்கினர்.
அதற்கமைய அப்பகுதியில் உள்ள ஐந்து பொதுமக்களும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் இணைந்தனர். 56 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூவ் அவர்களின் மேற்பார்வையின் கீழ், 561 காலாட் படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மற்றும் 17 ஆவது விஜயபாகு காலாட் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியும் ஒருங்கிணைத்து இந்த மனிதபிமான திட்டத்தை மேற் கொண்டனர். Sports News | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ