19th September 2020 22:13:10 Hours
சர்வதேச கடல்கரை தூய்மைப்படுத்தும் நாளான 2020 (செப்டெம்பர் 19) உடன் இணைந்த தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் (19-25 செப்டெம்பர்) இன்று காலை (19) ஆம் திகதி மவுண்ட் லிவினியா கடற்கரை பகுதியில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரத்தின் ஒத்துழைப்புடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, முப் படையினர் மற்றும் ஆர்வ தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கௌரவ சுற்றுச்சூழல் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், மூத்த பொளிஸ் அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் தூய்மைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன் முப் படையினர்களுடன் ஆர்வ தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கினர்.
பின்னர், சுருக்கமான வரவேற்பு உரையின் பின்னர் சுவரொட்டி பிரச்சாரம் மற்றும் சர்வதேச கடலோர தூய்மை நாள் -2020 உடன் இணைந்த கலை கண்காட்சியில் வெற்றியாளர்களுக்கு பிரதமர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் துப்புரவுத் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல 142 படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் உபுல் குனசேகர மற்றும் இராணுவத்தினர் பலர் கலந்துகொண்டனர். url clone | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf