15th September 2020 22:52:51 Hours
கேர்ணல் எச்.ஏ. கீர்த்திநத இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் 14 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (12) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இராணுவ சம்பிரதாய கௌரவ மரியாதைகளின் பின்பு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மகா சங்க சபையின் உறுப்பினர்களால் 'செத் பிரித்' கோஷமிட்டு சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பணிமனையில் ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பாரமேற்றுக் கொண்டார்.
பின்பு படையினர் மத்தியில் பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி உரை நிகழ்த்தினார். இதன் போது இப்பயிற்சி பாடசாலைக்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும், இராணுவ தொண்டர் பயிற்சி பாடசாலையின் 2020 – 25 ஆம் ஆண்டிற்கான முன்னோக்கிய மூலோபாயமாக தலைமை மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கட்டளை தளபதி பயிற்சி பாடசாலை வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பயிற்சி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார். best Running shoes | jordan Release Dates