15th September 2020 22:39:54 Hours
புதிதாய் பதவியேற்ற 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் அவரது நிருவாகத்தின் கீழ் இயங்கும் 522 ஆவது படைத் தலைமையகம், 7 மற்றும் 15 ஆவது (தொண்டர்) கஜபா படையணிகளுக்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
புதிய படைத் தளபதி அவர்கள் 522 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளும் போது அங்குள்ள படையினரால் இராணுவ கௌரவ மரியாதை வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் 522 ஆவது கட்டளை தளபதியின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட விளக்கம் தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.
பின்னர் பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | Nike Shoes