15th September 2020 15:42:57 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 68 ஆவதுப் படைப்பிரிவின் 681 பிரிகேட்டின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 64 ஆவதுப் படைப்பிரிவின் 642 பிரிகேட்டின் 23 விஜயபாகு காலாட்படை படை ஆகியவற்றின் படையினர் அண்மையில் சமூக நல திட்டங்களை முன்னெடுத்து வைத்தனர்.
681 பிரிகேட்டின் 9 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினர் வியாழக்கிழமை (10), படைப்பிரிவின் 9வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி (எஸ்.எல்.என்.ஜி) துருப்புக்கள் 50-60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு வியாழக்கிழமை 10ம் திகதி முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் அன்னதானம் மற்றும் தேர்ந்தெடுத்த சிலருக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகளும் வழங்கி வைத்தனர்.
68 ஆவதுப் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ, 681 பிரிகேட்டின் தளபதி கேணல் நளின் ஹெட்டியாராச்சி , 68 ஆவதுப் படைப்பிரிவின் சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஏ.சி.எல் கம்லத், 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி மேஜர் பி.டி.எல் டி அல்விஸ், மற்றும் 681 ஆவதுப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் எம்.கே.ஜி.எஸ் முதுகுட ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 ஆவதுப் படைப்பிரிவின் 642 படைத் தலைமையகத்தின் 23 விஜயபாகு காலாட்படை படையணியின் படையினர் சனிக்கிழமை (14) தனது கட்டளையின் கீழ் உள்ள 155 வறிய குடும்பங்களுக்கு தனது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளுவதற்காக மரக்கன்றுக்களை பகிர்ந்தளித்தனர்.
64 ஆவதுப் படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரண்டுல ஹத்னாகொட, 642 பிரிகேட் தளபதி கர்னல் பிரசன்ன விஜேசூரிய, 23 வது விஜயபாகு கலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.டி.எஸ்.அதுகோரல ஆகியோர் பகிர்ந்தளித்தனர்.
ஒரு குடும்பத்திற்கு அதன்படி நான்கு பலா கன்றுகள், ஒரு அகத்தி மரக்கன்று (செஸ்பனியா கிராண்டிபுளோரா) மற்றும் ஒரு தேசிக்காய் கன்று வழங்கப்பட்டது. படையினரின் வேண்டுகோளின் பேரில் முல்லைத்தீவு வனவள பாதுகாப்புத் திணைக்களம் மரங்களை வழங்கியிருந்தது. Asics shoes | Men’s shoes