15th September 2020 22:38:49 Hours
புத்தளத்தில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களது ஏற்பாட்டில் இம் மாதம் (12) ஆம் திகதி புத்தளம் பகுதியில் பொதுமக்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் பிரதி பொலிஸ் அத்தியட்சகரும் களுத்தறை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளரான திரு புத்திக பிரசாத் பாலசந்திர அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் புத்தள பிரதேசத்திலுள்ள 300 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெனரல் பிரியங்கா பெர்னாண்டோவின் நெருங்கிய அறிமுகமான திரு ரனில் பெர்னாண்டோ மற்றும் திருமதி ஷெவன் பெர்னாண்டோ ஆகியோரது நிதியுதவியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோருக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மதிப்புக்குரிய கடவத்த தம்மாதாசி தேரர் மகாகொனவேவ சித்தா சமாதி பரமிட விகாரை, அருட் தந்தை செவின் பெர்ணாண்டோ, கருவலகஸ்வெ சபையின் பிரதானி, புத்தள மாவட்ட செயலாளர் திருமதி சந்திரசிரி பண்டார, பிரதி பொலிஸ் மா அதிபர் நாமல் பெரேரா, புத்தள பிரதேச செயலாளர் திருமதி சமந்த வீரசூரிய, கல்பிட்டி பிரதேச செயலாளர் திரு நந்தன சோமதிலக மற்றும் அரச அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov