Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2020 11:10:08 Hours

இராணுவத்தினரால் மாணவர்கள் மற்றும் வறுமை குடும்பத்தினருக்கு உதவிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 68, 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கென்டர்ஷ் முகாமைத்துவ தனியார் சேவை நிறுவனத்தின் அனுசரனையில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பிகள் இம் மாதம் (12) ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரசேத செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு 682 ஆவது படைத் தளபதியின் அழைப்பையேற்று 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். இதன் போது 64 பாடசாலை பைகள் மற்றும் 20 தண்ணீர் நிரப்பிகள் படைத் தளபதி மற்றும் அணுசரனையாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாழ்வாதாரத்தின் பின் தங்கிய குடும்பித்தினருக்கு இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 682 ஆவது படைத் தளபதி கேர்ணல் சமிந்த கலப்பதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Nike Air Max