Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2020 23:26:23 Hours

532 பிரிகேட் தளபதி 53 ம் படைப்பிரிவு தளபதிக்கு வரவேற்பு

53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனரத்ன அவர்கள் 532வது பிரிகேட்டிக்கு தனது வருடாந்த உத்தியோகபூர்வ விஜயத்தை திங்கள்கிழமை (07) மேற்கொண்டார்.

பிரதான நுழைவாயில் 532 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவ மரபுகளின்படி வரவேற்பளிக்கப்பட்டது.

விஜயத்தின் ஞாபகார்த்தமாக 53 ம் படைப்பிரிவு தளபதி பிரிகேட் தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நாட்டியதோடு படையினருக்கு உரையாற்றினார்.

இதையடுத்து முகாம் விகாரையின் வெள்ளரசு மரத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவரை (போதி கயை) திறந்து வைத்தார். மேலும் பிரிகேட்டின் முன்மொழியப்பட்ட நீர் வழங்கல் முரைமையையும் ஆராய்ந்தார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த சேனரத்ன சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினருடன் தேநீர் விருந்திலும் பங்குக் கொண்டார். இறுதியில் 532 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்னவிற்க்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். விடைப்பெறுவதற்கு முன்னர் பிரதம அதிதி விருந்தினர் பதிவு புத்தகத்தில் பாராட்டி பதிவிட்டார். Running Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092