11th September 2020 13:32:26 Hours
இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் இவருக்கு பனாகொடையிலுள்ள பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இம் மாதம் (5) ஆம் திகதி இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மகளிர் படைத் தளபதி அணிவகுப்பு மைதானத்திற்கு வருகையில் இப்படையணியின் மத்திய கட்டளைத் தளபதியான பிரிகேடியர் ஜானக ரத்னாயக அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு இராணுவ மகளிர் படையினரால் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்றைய தினம் விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு பீரங்கிப் படையணி தலைமையக அதிகாரி விடுதியில் இரவு விருந்தோம்பல் பிரியாவிடையும் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த கௌரவ மரியாதை நிகழ்வில் மகளிர் படையணியின் மத்திய கட்டளை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மகளிர் படையணியின் போர் வீராங்கனைகள் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK