10th September 2020 07:52:58 Hours
கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிமித்தம் முது கட்டுவ தேசிய தொழில் மைய வளாகத்தில் பாரிய மரங்கள் வீழ்ந்து இப்பகுதி சேதமடைந்தது. இதனை 14 மற்றும் 143 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 16 ஆவது கஜபா படையணியினால் இம் மாதம் (6) ஆம் திகதி இந்த மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களால் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிபொலவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாம் 143 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 16 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜே.எம் ஜயக்கொடி அவர்களது தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. affiliate tracking url | Sneakers Nike