10th September 2020 08:20:22 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள துனுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள 65 ஆவது படைப் பிரிவிற்கு பிரிகேடியர் டிகிரி திசாநாயக அவர்கள் இம் மாதம் 09 ஆம் திகதி 12 ஆவது புதிய படைத் தளபதியாக பதவியேற்றார்.
பதவியேற்று படைப் பிரிவிற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்பு பணிமனைக்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பாரமேற்று பின் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | GOLF NIKE SHOES