10th September 2020 07:50:22 Hours
ஜேர்மன் டிசாசு நகரில் இம் மாதம் (8) ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வயி. பிரியதர்ஷன அபேகோன் அவர்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றி 10.16 செக்கனில் வேகமாக ஓடி முடித்து தெற்காசிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் இடம்பெற்ற 7 ஆவது உலக பாதுகாப்பு சேவைகள் தடகள 4 x 400 மீற்றர் போட்டியில் பங்கேற்றி லான்ஸ் கோப்ரல் அபேகோன் அவர்கள் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்று தந்து எமது நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளார். Running sport media | NIKE HOMME