10th September 2020 05:10:22 Hours
இன்று காலை (10) ஆம் திகதி அறிக்கை நிலவரப்படி, மேலும் 07 பேர் கோவிட் -19 தொற்றுநோய்க்கு சாதகமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கும், சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த (5) பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் சீசைன் ஹோட்டல், ஈசீஓ சர்வ், விடுர சம்பூர் மையம், தியதலாவை, இராஜகிரிய ஆயுர்வேத தனிமை படுத்தல் மையங்களிலிருந்த நபர்கள் என்று கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையம் தெரிவித்தது.
இன்றைய காலை 6.00 மணி அறிக்கையின் படி கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய நபர்களது முழு விபரம் 640 ஆகும். இவர்களில் 519 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளும், 67 ஊழியர்களும், 5 விருந்தினர்களும்,வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 48 குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புடை ஒருவரும் உள்ளடக்கப்படுவார்கள்.
சவுதி அரேபியாவிலிருந்து UL 2226 விமானத்தில் 274 பிரயாணிகளும், கட்டாரிலிருந்து QR 668 விமானத்தில் 81 பிரயாணிகளும், டுபாயிலிருந்து UL 226 விமானத்தில் 292 பயணிகளும் இன்று காலை கொழும்பை வந்தடைந்தனர். மேலும் அபுதாபியிலிருந்து EY 264 விமானத்தின் மூலம் வரவிருக்கும் 09 பயணிகளும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இன்று பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு 585 நபர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் பெல்வெஹெரயிலிருந்தும், 87 பேர் சீகிரியா விலேஜிலிருந்தும், 92 பேர் பிரெஷ்கோ ஈகோ விலாவிலிருந்தும், 21 பேர் ஹயாபீசிலும், 154 பேர் ஈடென் கார்டனிலும், பொது சேவைப் படை முகாமில் ஒருவரும், இராஜகிரிய ஆயுர்வேத த்தில் 40 பேரும், தியகம் விளையாட்டு தொகுதியிலிருந்த 51 பேரும் மற்றும் தம்மின்ன மையத்திலிருந்த 119 பேரும் வெளியேறியுள்ளனர்.
இன்று வரைக்கும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து முழுமையாக 39,230 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிருவகித்து 57 மையங்களில் 6,126 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் (09) ஆம் திகதி 1600 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டதோடு. இன்று வரைக்கும் முழுமையாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 245,112 ஆகும்.
இன்று கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியிருந்த 11 நபர்கள் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர். அத்துடன் கந்தகாடிலிருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியிருந்து பூரன குணமாகியவர்களின் முழு எண்ணிக்கை 634 ஆகும். மேலும் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ள 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களை தவிர எமது நாட்டினுள் கொரோனா தொற்று நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (நிறைவு) bridgemedia | Sneakers