Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2020 08:00:24 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் சமிக்ஞை படையணியைச் சேர்ந்த உயரதிகாரிக்கு கௌரவ மரியாதை

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் சமிக்ஞை படையணியைச் சேர்ந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன அவர்களுக்கு இம் மாதம் (5) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞை படையணி தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைமையகத்தில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் உயரதிகாரிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு இந்த உயரதிகாரி தலைமையக வாளகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்காக அஞ்சலிகளை செலுத்தி பின்னர் தலைமையகத்திலுள்ள படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன் போது இவரது 34 வருட இராணுவ சேவையின் போது இவருக்கு ஒத்துழைப்பை வழங்கிய இராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் மற்றும் பகல் விருந்தோம்பல் நிகழ்விலும் பங்கு பற்றி சிறப்பித்தார். அத்துடன் அன்றைய தினம் தலைமையக அதிகாரி விடுதியில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலும் இணைந்து கொண்டார். Running sport media | Womens Shoes Footwear & Shoes Online