Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2020 10:30:24 Hours

வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இராணுவ தலைமையக வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் 4 ஆவது பணிப்பாளராக இம் மாதம் (9) ஆம் திகதி பணிமனையில் பதவியேற்றுக் கொண்டார்.

புதிய பணிப்பாளர் அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்று கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | FASHION NEWS