Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2020 12:18:06 Hours

விடைபெற்றுச் செல்லும் சிங்கப் படைத் தளபதிக்கு இராணுவ மரியாதை

இலங்கை சிங்கப் படையணியில் 35 வருட நீண்ட காலங்கள் சேவைகள் புரிந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் சிங்கப் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களுக்கு இம் மாதம் (5) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை சிங்கப் படையணியின் பிரதி மத்திய கட்டளை தளபதி அவர்கள் நுழைவாயிலில் வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்பு அணிவகுப்பு மைதானத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாய அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பின்பு தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். பின்பு ஆணைச்சீட்டு மற்றும் சாஜன் விடுதிக்கு சென்று தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டு படையினருடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு தனது கடமை பொறிப்பினை பாரமளிக்கும் ஆவணத்திலும் கையொப்பமிட்டார்.

இறுதியில் படைத் தளபதி அவர்கள் அதிகாரி விடுதியில் உரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களுக்கு சிங்கப் படையணியினால் நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். Sportswear Design | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!