08th September 2020 13:18:06 Hours
மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் சிங்கப் படையணியின் 14 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (06) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி அவர்களை சிங்கப் படையணியின் பிரதி மத்திய கட்டளை தளபதி துலித் பெரேரா அவர்கள் தலைமையக நுழைவாயிலில் வைத்து வரவேற்றார்.
பின்பு அணிவகுப்பு மைதானத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதியான பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்கள் வரவேற்று படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் மா மர நடுகையும் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரம் மற்றும் சாஜன் விடுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு படையினருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.
பின்பு சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு புதிய படைத் தளபதி அவர்கள் தமது ஆவணத்தில் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய படைத் தளபதி அவர்கள் பின்பு தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவி கூர்ந்து அஞ்சலியை செலுத்தினார்.
பின் புதிய படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திலுள்ள அதிகாரிகளுக்கு மத்தியில் உரையை நிகழ்த்தினார் இதன் போது கடமை, பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை உள்ளடக்கி வலியுறுத்தினார்.
படைத் தளபதி அவர்கள் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு இறுதியில் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது பாரியார்கள், ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Ανδρικά Nike