08th September 2020 16:06:37 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மற்றும் யாழ் வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளின் நலன்புரி நிமித்தம் இம் மாதம் (6) ஆம் திகதி முல்லைத்தீவிலுள்ள 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இந்த இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னாஹொட அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இரத்த தானமானது முல்லைத்தீவு பொது வைத்தியசாலை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரிகளது ஒருங்கிணைப்புடன் 206 படை வீரர்கள் இந்த இரத்த தானங்களை வழங்கி வைத்தனர். Authentic Nike Sneakers | adidas Yeezy Boost 350