Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 21:46:11 Hours

விடைபெற்றுச் செல்லும் 65 ஆவது படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

இடமாற்றத்தின் நிமித்தம் விடை பெற்றுச் செல்லும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களிற்கு இம் மாதம் (07) ஆம் திகதி துனுக்காயில் அமைந்துள்ள தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைமையகத்தில் விடை பெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

பின்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | Autres