07th September 2020 08:26:51 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாடநெறி இலக்கம் 88 இன் 46 கெடற் அதிகாரி செப்டம்பர் மாதம் 3-4 திகதிகளில் யாழ் மற்றும் கிளிநெச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகங்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
கிளிநெச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு அதன் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடெ அன்புடன் வரவேற்றார், மேலும் அந்த அதிகாரிகளுடன் அதிகாரிகளின் உணவகத்தில் கலந்துரையாடல் அமர்வு நடத்தப்பட்டது, இதன் போது பணிநிலை அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.
அடுத்த நாள், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பொது பதவிநிலை அதிகாரி I அவர்கள் கிளிநொச்சியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு , பணிகள் மற்றும் பொறுப்புகள், யுத்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் தேசத்தின் மேம்பாட்டிற்கான இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார். இறுதியில் கெடற் அதிகாரி தளபதிக்கு அவர்களின் மரியாதையின் அடையாளமாக ஒரு நினைவு பரிசையும் வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் செல்லும் வழியில் அவர்கள் ஆணையிறவில் உள்ள கோப்ரல் காமினி குலரத்ன (ஹசலகா காமினி) நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தினர், அங்கு 9 வது சிங்க படையின் கட்டளை அதிகாரி நினைவுச் சின்னம் தொடர்பாக விளக்கமளித்தார்.
அத்தோடு அவர்கள் செப்டம்பர் மாதம் 4,5ம் திகதிகளில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு அவர்களை யாழ் தளபதி சார்பாக சிரேஸ்ட அதிகாரி வரவேற்றார். பின்னர் யாழ் கோட்டை, யாழ் , அராலி நினைவாலயம் மற்றும் நல்லூர் கோவில் என்பனவற்றை பார்வையிட்டனர். கல்வி சுற்றுப்பயணத்தின் நினைவாக யாழ் தளபதிக்கு பயண ஏற்பாடுகளுக்காக அடையாள நினைவு பரிசு வழங்கினர்.latest jordan Sneakers | Nike