Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 10:26:51 Hours

512வது பிரிகேட் படையினர் யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் மருதை மர நடுகை

வறண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் மழைக்காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமையானதாக மாற்றும் நோக்கத்துடன் யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 51வது படைப்பிரிவின் 512 பிரிகேட்டின் அல்லைபிடி பகுதியில் படையினரின் பங்குபற்றலில் சனிக்கிழமை 5ம் திகதி யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பாதையின் இருமருங்கிலும் 1000 மருதை மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த மாபெரும் திட்டத்தை வெற்றிக்காக ஊர்காவற்றுறை மஜிஸ்திரேட் மருதை மரங்களை இராணுவத்திற்கு வழங்கினார். 51வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சாதேவ கடற்படை தளத்தின் படையினர் மற்றும் 17வது கெமுனு ஹேவா படையினர் அந்த மரக்கன்றுகளுக்கான 1000 குழிகளை தோண்டினர்.

தொடக்க விழாவில் ஊர்காவற்றுறை மாஜிஸ்திரேட் நீதிபதி திரு. ஏ.பி. ஜூட்சன், வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் கபில சமரவீர , 512வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் எரந்த ரத்நாயக்க, வேளணை பிரதேச செயலாளர் திரு. ஆர். சோதிநாதன், இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் கடற்படை மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் பங்கேற்றனர். latest Running Sneakers | Asics Onitsuka Tiger