Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2020 11:18:06 Hours

கடந்த 24 மணித்தியாலங்களினுள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை கோவிட் மையம் தெரிவிப்பு

இன்றைய (08) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்று நோய்க்கு எவரும் உள்ளாகவில்லை என்று கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இன்றைய காலை 6.00 மணி அறிக்கையின் படி கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய நபர்களது முழு விபரம் 640 ஆகும். இவர்களில் 519 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளும், 67 ஊழியர்களும், 5 விருந்தினர்களும்,வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 48 குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புடை ஒருவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

டோகார் கட்டாரிவிருந்து QR 668 விமானத்தின் மூலம் கொழும்பிற்கு வருகை தந்த 20 பயணிகளும் அத்துடன் வருகை தரவிருக்கும் பயணிகளும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்றைய நிலவரத்தின் படி 331 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான இராணுவ சேவைப் படையணியில் 02 பேரும், இராணுவ பொது சேவைப் படையணியிலிருந்து 23 நபர்களும், ஹபரன ஓக்ரொ ஹோட்டலில் இருந்த 69 நபர்களும், தம்மின்னையிலிருந்து 119 நபர்களும், டொல்பின் ஹோட்டலிலிருந்து 12 பேரும், வின் பீச் ரிசோட்டிலிருந்து 50 பேரும், நாச்சிகுடாவிலிருந்து 49 பேரும், ஒலுவிலிருந்து 07 பேரும் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர்.

இது வரைக்கும் முழுமையாக 38,393 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முப்படையினரால் நிருவாகித்து வரும் 63 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,624 நபர்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளனர். இன்றைய திகதியின் பிரகாரம் 1625 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதுவரைக்கும் முழுமையாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 241,631 ஆகும்.

இன்று தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த ஒருவர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளார். அத்துடன் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்த கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ள 626 நபர்கள் சிகிச்சையளிப்பின் வெ வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் 14 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Sportswear Design | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov