Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2020 15:09:33 Hours

யு.சி.சி மாணவ அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

புத்தளையிலுள்ள இராணுவ துறைசார் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் படையணி கட்டளை அதிகாரி பாடநெறி இல – 7 மேற்கொள்ளும் மாணவ அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்படின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இன்று (7) ஆம் திகதி சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கட்டளை உத்திகள் குறித்த அவர்களின் அறிவின் தரத்தை மதிப்பிடுவதற்காக யு.சி.சி மாணவர் அதிகாரிகளின் 23 பேர் கொண்ட குழு, பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான குழுவால் பேட்டி காணப்பட்டனர்.

இந்த சந்திப்பின் போது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன், பிரதி பதவிநிலை பிரதானி மேஜர்ஜெனரல் ரசிக் பெர்ணாண்டோ, இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, இராணுவ செயலக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே, பொது நிருவாக பிரதானி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா, பொது நிதி மேலாண்மை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் சேன வடுகே, குவாடர் மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் துமிந்த ஶ்ரீநாஹ, போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, பயிற்சி பணிப்பாளர் நாயகம் நிஷாந்த ஹேரத், இராணுவ துறைசார் மேம்பாட்டு மையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கேர்ணல் சுரேஷ் குரே போன்றோர் இணைந்திருந்தனர். url clone | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp