07th September 2020 15:00:01 Hours
ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சனத் குமார வாமதேவ பானபொக்க அவர்கள் தனது 77 ஆவது வயதில் இம் மாதம் (04) ஆம் திகதி காலமானார். இவரது பூதவுடல் இம் மாதம் (07) ஆம் திகதி கொழும்பு பொது மையானத்தில் இராணுவ கௌரவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இவரது இறுதி மரண ஊர்வலத்தில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே, தொண்டர் படையணியின் பிரதி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கெலும் நுகேகொட, ஆளனி நிருவாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் உதய குமார, சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்து கொண்டனர்.
இராணுவ பேண்ட் வாத்தியத்தின் அணிவகுப்பு மரியாதையுடன் எட்டு படை வீரர்கள் இவரது மரண தேக பெட்டி தேசிய கொடி போத்திய வண்ணம் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்வதற்கு இவரது தேகம் எடுத்து செல்லப்பட்டது.
இவரது தேகம் தகனம் செய்வதற்கு முன்பு மயானத்தில் இராணுவ தளபதியின் சார்பாக நிறைவேற்று பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களினால் இராணுவ உரை பகுதி 1 உரைக்கப்பட்டன. அத்துடன் காலஞ் சென்ற இந்த உயரதிகாரிக்குரிய சிங்கப் படையணி அதிகாரியால் இவரது சேவையை கௌரவிக்கும் முகமாக சிறப்புரை பகுதி 1 உரைக்கப்பட்டு பின்னர் படையினரால் 13 துப்பாக்கி வெடி இராணுவ மரியாதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியில் இராணுவ பீகோல் நாத ஓசையுடன் இவர்களது உறவினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இவரது கல்லரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டன.
இராணுவத் தளபதியால் வழங்கப்பட்ட சிறப்பு பகுதி I ஆணை இறுதிச் சடங்கின் போது முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
spy offers | Air Jordan