05th September 2020 06:00:38 Hours
தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் அதிகாரிகள் கெடட் இல-88 பாடநெறியினை தொடரும் நாற்பத்தி ஆறு மாணவ அதிகாரிகள் தங்களது கற்றலின் ஒரு நிகழ்சித்திட்டமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கான சுற்றுலதவினை வியாழக்கிழமை 3 ஆம் திகதி மேற்கொண்டனர்.
விஜயத்தை மேற்கொண்ட மாணவ அதிகாரிகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களுக்கு பதிலாக பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் சுகத் ரத்நாயக்க அவர்கள் வரவேற்றார். அதன்பிறகு, மேஜர் எல்.எல்.சி.எஸ். கப்ரால் (ஜி 2 ஓப்ஸ்) அவர்கள் இலங்கை இராணுவதினரால் முல்லைத்தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற கடந்த கால மனிதாபிமான நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவ வகிபாகங்கள் மற்றும் தற்போதைய திட்டங்கள் தொடர்பான சிறப்பு விளக்கக்காட்சியை நடத்தினார்.
உரையாடலின் முடிவில், மாணவ அதிகாரிகள் தங்களது பாராட்டுக்கான அடையாளமாக மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கினர். குறித்த அமர்வாவது அதிகாரிகள் உணவக அறையில் இடம்பெற்ற விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தது. பிரிகேடியர் சுகத் ரத்நாயக்க பி.ஜி.எஸ், பிரிகேடியர் ஒருங்கிணைப்பு (தொண்-விடயங்கள்) பிரிகேடியர் நிஹால் சமரவிக்ரம, மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.
அடுத்து, 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுப் பிரதேசத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர்களை 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் வேளை, குறித்த மாணவ அதிகாரிகள் இறுதி யுத்தம் நடைபெற்ற இடங்கள் மற்றும் ஏனைய விருப்பமான இடங்களை சென்று பார்வையிட்டனர். விஜயத்தின் இறுதியில் மாணவ அதிகாரிகள் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்களினது உருங்கிணைப்பினை பாராட்டும் முகமாக விஷேட நினைவுச் சின்னத்தினை வழங்கினர். குறித்த நிகழ்வானது 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தில் இடம்பெற்ற மதிய உணவு Running Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ