07th September 2020 12:26:51 Hours
இன்றைய (07) ஆம் திகதியின் அறிக்கையின் படி, மேலும் 02 நபர்களுக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 02 பேரும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், அவர்களில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவரும், எதியோப்பியாவில் ஒருவரும், ஹோட்டல் டொல்பின் மற்றும் ஹோட்டல் ஜெட்விங் புளுவில் தனிமைபடுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (07) காலை 6.00 மணியளவில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 640 ஆகும். இவர்களில் 519 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர் ஊழியர்கள் , 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் ஒரு நபர் உட்பட நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் இருந்து AHO 658Y விமானத்தின் மூலம் 11 பயணிகளும், துபாயில் இருந்து EK 648 விமானத்தின் மூலம் 20 பயணிகளும், தோகா கட்டாரில் இருந்து QR668 விமானத்தின் மூலம் 75 பயணிகளும், இந்தியாவில் இருந்து 6E 9034 விமானத்தின் மூலம் 2 பயணிகளும் மற்றும் ஜப்பான் UL 455 விமானத்தின் மூலம் 2 பயணிகளும் கொழும்பு வந்தடைந்துள்ளதுடன், மேலும் நோர்வை TB 9140 விமானத்தின் மூலம் 86 பயணிகள் (07) ஆம் திகதி இன்று கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
(07) ஆம் திகதிக்குள் தனிமைப்படுத்தப்பட்ட 32 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர். அவர்களில், நிபுன பூஸ்ஸ தனிமைபடுத்தல் மையம் 04 நபர்கள், பசறை யுடிஎம்ஐ தனிமைபடுத்தல் மையம் 06 பேர், ஹோட்டல் கல்கஸ்ஸை தனிமைபடுத்தல் மையம் 01 நபர், ஹேகித்த தனிமைபடுத்தல் மையம் 09 பேர், ஹோட்டல் பெரடைஸ் தனிமைபடுத்தல் மையம் 12 பேர் ஆகியோர் உள்ளடங்குவர்.
அதேபோல், இன்று (07) ஆம் திகதி காலையுடன் மொத்தம் 38,359 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 63 தனிமைபடுத்தல் மையங்களில் 6,610 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (06) திகதிக்குள் 1820 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 239,907. ஆகும்.
கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையை விட்டு இன்று (07) ஆம் திகதி அதிகாலை வெளியேரியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஆவர். மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 626 நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 14 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர வேறு எந்த கொரோன் தொற்று சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் பின்பற்றி, நோய் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) latest Nike release | Nike Shoes