Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2020 15:38:17 Hours

வெளிநாட்டவர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று கொவிட் மையம் தெரிவிப்பு

இன்றைய (31) ஆம் திகதி அறிக்கையின் படி 17 நபர்களுக்கு கொவிட் –கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 17 பேர்களும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்த கொக்கலா பீச் தனிமைபடுத்தல் மையத்தில் (3) பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த பூனானி மட்டக்களப்பு பல்கலைக்கழக தனிமைபடுத்தல் மையத்தில் (10)பேர் ,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நுவரெலிய அரலி கிரீன் சிட்டி தனிமைபடுத்தல் மையத்தின் மற்றும் ரான்தம்பே தனிமைபடுத்தல் மையத்தில் (02) பேர், மற்றும் இந்தியாவில் இருந்து கொழும்பு சினமன் ரெட் ஹோட்டல் வருகை தந்த ஒரு நபரும் ஆகும். அதற்கமைய இன்றைய (31) ஆம் திகதி 0600 மணி வரையிலான அறிக்கையில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்களில் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் ஒரு நபர் உட்பட நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

தோஹா கத்தாரிலிருந்து QR 668 விமான மூலம் 400 பயணிகளும், சென்னையிலிருந்து 6E 9034 விமானம் மூலம் 29 பயணிகளும், சென்னையிலிருந்து 6E 9111 விமானம் மூலம் 18 பயணிகளும் இன்று (31) காலை கொழும்பு வந்து சேர்ந்தன, இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

(31) ஆம் திகதிக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 73 நபர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர். அவர்களில், பூஸ்ஸா தனிமைபடுத்தல் மையம் 04 நபர்கள், கல்கந்த தனிமைபடுத்தல் மையத்தில் 37 பேர், டொல்பின் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 11 பேர், மவுன்ட் லிவினியா ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 4பேர், ஹேட்டல் ஜெட்வின் புலு தனிமைபடுத்தல் மையத்தில் 4பேர், ஹேட்டல் ஜெட்வின் சி தனிமைபடுத்தல் மையத்தில் 13 பேர் உள்ளடங்குவர்.

அதேபோல், இன்று (31) ஆம் திகதி காலையுடன் 35, 097 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 67 தனிமைபடுத்தல் மையங்களில் 6,901 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (29) திகதிக்குள், 1610 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகள் 223,982..ஆகும்.

இதற்கிடையில், கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையை விட்டு இன்று (30) ஆம் திகதி அதிகாலை வெளியேரியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஆவர். இதில் 8 பேர் தனிமைப்படுத்தலில் வெளிநாட்டவர்கள் மற்றும் 3 பேர் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு மையத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 619 நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 20 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Best jordan Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov