Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2020 09:30:47 Hours

6 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினரால் சிறார்களுக்கு மூலிகை பானம் வழங்கல்

68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் சிறார்களின் நலன் கருதி சமூகம் நல திட்டத்திற்கு அமைய கடந்த திங்கற்கிழமை (31) ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள வெல்லைமடத்தில் உள்ள செயின்ட் மேரி பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு மூலிகை பானம் (கீரை கஞ்சி) வழங்கப்பட்டன.

இப் பணியானது முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ மற்றும் 682 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி கேணல் சமிந்த கலப்பதி ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 6 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக அவர்களின் ஆசிர்வாதத்துடன் 6 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி கிரிஷன் உட்பட அதிகாரிகள் மற்றும் 6 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. best Running shoes brand | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf