04th September 2020 10:00:47 Hours
புனானியில் அமைந்துள்ள 9 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி முகாமிலும், வாசவிலனில் அமைந்துள்ள 10 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி முகாமிலும் நடைபெற்ற இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் போஸ்ட் டிப்போ பயிற்ச்சி முடிவின் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது (27) ஆம் திகதி வியாழக்கிழமை மின்னேரியாவில் அமைந்துள்ள பீரங்கி பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பீரங்கி பாடசாலையின் படைத் தளபதி கேணல் ரோஹான் மெதகொட அவர்கள் கலந்து கொண்டார்.
போஸ்ட் டிப்போ பாடநெறி FD 215 இல் சிறந்த சாதனைகளை பெற்ற 7 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் எஸ் / 165823 கன்னர் பி.ஜி.டி.சி பலபிட்டிய, மற்றும் போஸ்ட் டிப்போ பாடநெறி FD 215 ‘A’ இன் 10 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் கன்னர் எம்.டி.இ.டி முத்துநாயக்க ஆகியோர்களுக்கு கன்னர் வெற்றி கிண்ணம் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பீரங்கி பாடசாலையின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்துகொண்டனர். bridgemedia | Entrainement Nike