Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2020 08:04:38 Hours

ஓய்வு பெற்று செல்லும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்தில் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் குமார சமரசிங்க அவர்களின் 34 ஆண்டுக்கும் மேலான இராணுவ சேவையை கெளரவித்து படைத் தலைமைய வளாகத்தில் கௌரவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவ சேவையில் இருந்து மேஜர் ஜெனரல் குமார சமரசிங்க அவர்கள் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் நாட்டிற்காக உயிர் நீத்த பீரங்கி படையணியின் போர் வீரர்களை நினைவு படுத்தி நினைவு தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அனைத்து படையினர்களின் பங்களிப்புடன் பீரங்கிப் பாடசாலை சிரேஷ்ட கன்னர் அதிகாரியின் தலைமையில் படையணி அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆணை சீட்டு அதிகாரி மற்றும் சாஜன் உணவகத்தில் தேநீர் விருந்து உபசாரம் மற்றும் மதிய உணவும் அனைத்து படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

அதற்கமைய, அடுத்த நாள் இரவு விருந்துபசாரத்தில் ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அவர்கள், அதிகாரிகள் மற்றும் படையணி அதிகாரிகளின் துணைவியாருடன் கௌரவிக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வின் நினைவாக நினைவு சின்னமும் வழங்கப்பட்டது. Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp