04th September 2020 09:08:18 Hours
இன்றைய (04) ஆம் திகதியின் அறிக்கையின் படி, மேலும் 10 நபர்களுக்கு கொவிட்- 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 10 வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள்மற்றும் வெளிநாட்டவர்களில் இந்தியாவில் இருந்து வருகை தந்து நுரைச்சோலை தனிமைபடுத்தல் மையத்தில் 02பேர், குவைட்டில் இருந்து வருகை தந்த 3 நபர்களில் முலங்காவில் தனிமைபடுத்தல் மையம் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் மையத்தில் 02பேர்,கட்டாரில் இருந்து வருகை தந்து விடத்தபலை தனிமைபடுத்தல் மையத்தில் 5 பேர் உள்ளனர்என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (04) காலை 6.00 மணியளவில்கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்களில் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர் ஊளியர்கள் , 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் ஒரு நபர் உட்பட நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து EK 648 விமானத்தின் மூலம் 08பயணிகளும், கட்டாரில் இருந்து QR 668 விமானத்தின் மூலம் 96பயணிகளும், நரிட்ட- ஜப்பானில் இருந்து UL 455 விமானத்தின் மூலம் 17 பயணிகளும் மற்றும் சென்னை 6E 9036 விமானம் கொழும்பு வந்தடைந்தனர், மற்றும் இத்தாலியில் UL 1208 விமானத்தின் மூலம் 48பயணிகள் (04) ஆம் திகதி இன்று கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
(04)ஆம் ஒரு திகதிக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 142 நபர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர். அவர்களில், புனானை தனிமைபடுத்தல் மையம் 40நபர்கள், ஹோட்டல் டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில் 22பேர், ஆயுர்வேத ஹோட்டல் ஜெட்வின் 3பேர், கல்கிஸ்ஸை ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 44பேர்,பேக்கன் பீச் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், பெரடைஸ் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், நிபுன பூஸ்ஸ தனிமைபடுத்தல் மையத்தில் 11பேர்மற்றும் ருவல்ல கல்பிட்டிய காடன் தனிமைபடுத்தல் மையத்தை சேர்ந்த 09 நபர்கள் இதில் உள்ளடங்குவர்.
அதேபோல், இன்று (04) ஆம் திகதி காலையுடன் 36,326 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73தனிமைபடுத்தல் மையங்களில் 7,746 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (02) திகதிக்குள், 2050 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகள் 232,710.ஆகும்.
கொரோனா தொற்றுக்குள்ளான 06 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையை விட்டுஇன்று (03) ஆம் திகதி அதிகாலை வெளியேரியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஆவர். மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 626நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 13நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) Running sports | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!