Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2020 09:00:18 Hours

வன்னி படை வீரர்களுக்கு ‘இயந்திரங்கள் மற்றும் உபகரண பயிற்சி பாடநெறிகள்

'இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு' குறித்த இரண்டு வார கால பயிற்சி நெறிகள் வன்னி படையினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. அலுவலக இயந்திரங்கள், மின் சாதனங்கள், வாகன இயந்திர உபகரணங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் மற்றும் அவற்றின் முக்கிய பராமரிப்பு மற்றும் அதனை நிர்வகிப்பது தொடர்பான அறிவை வழங்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்று இம் மாதம் (2) ஆம் திகதி இந்த பயிற்சிகள் நிறைவடைந்தது.

தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து அலுவலர் பயிற்றுநர்கள் மற்றும் சிரேஷ்ட ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இந்த பயிற்சி நெறிகளை மேற்கொண்டார். அத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படையணிகளைச் சேர்ந்த 42 நபர்கள் இந்த சான்றிதழ் பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சி வெளியேறும் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த படையினருக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் நலின் கொஸ்வத்த, பிரிகேடியர் ஜகத் நிஷாந்த, கேர்ணல் ஜீவானந்த ரனஹேவா, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Sports brands | adidas NMD Human Race