03rd September 2020 22:44:30 Hours
இன்று மாலை கடல் பரப்பில் 31 மைல் தொலைவில் பயணித்த கப்பலொன்று இயந்திர அறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விபத்துக்குள்ளாகி இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து கப்பலிலிருந்த ஊழியர்க ளை மீட்டனர்.
இதற்கான காரணம் என்னவென்றால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கப்பல் சுரங்க பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப விசாரனைகளின் மூலம் தெரியவந்தது. பின்பு இலங்கை கடற்படை மற்றும் விமானப் படையின் பங்களிப்புடன் இந்த கப்பலை நங்கூரமிட்டு கடலில் நிறுத்தினர்.
மேலும் இந்த கப்பலிலிருந்த கெப்டன் மற்றும் மாலுமிகள் வெளியேற்றப்பட்டு காயமுற்ற கப்பல் சேவை ஊழியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்தில் பாதிப்பிற்கு உள்ளான எண்ணெய் கப்பலிலிருந்த நபர்கள் கடற்படை மற்றும் விமானப் படையினரது பாரிய அர்ப்பணிப்புடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். Sports brands | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp