Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2020 09:30:38 Hours

பிரிகேடியர் கித்சிரி லியனகே 52 ஆவது படைத் தளபதியாக நியமிப்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் 52 ஆவது படைப் பிரிவின் 24 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (3) ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள படைப் பிரிவு தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய படைத் தளபதிக்கு 16 ஆவது கஜபா படையணி, 12 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு புதிய படைத் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலிலும் இணைந்து கொண்டார்.

புதிய படைத் தளபதியான பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன் போது சமூக நலன்புரித் திட்டங்கள் தொடர்பான விடயங்களை படையினர்களுக்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கட்டளை தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Sport media | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff