02nd September 2020 09:30:03 Hours
புதிதாய் நியமிக்கப்பட்ட இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் கடந்த ஆகஸ்ட மாதம் (16) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள முதலாவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்களை நுழைவாயிலில் வைத்து இராணுவ மரியாதைகள் மேற்கொண்டு பின்னர் இந்த படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஈ.எம். டப்ள்யூ பண்டார அவர்கள் வரவேற்றார்.
பின்னர் புதிய படைத் தளபதிக்கு இந்த படையணியின் நிருவாக விடயங்கள் தொடர்பாக கட்டளை அதிகாரியினால் விளக்கமளிக்கப்பட்டன.
பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையகத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். இச்சந்தர்ப்பத்தில் 582 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மானதா ஜகம்பத், இலேசாயுத காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி அநுர திசாநாயக , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் பூசாவில் அமைந்துள்ள இலேசாயுத பட்டாலியன் தலைமையகத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் (17) ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டார். அச்சமயத்தில் இவருக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வாளகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி தலைமையக நூலகம் மற்றும் படுக்கை மெத்தைகள் தொடர்பான விடயங்களையும் ஆராய்ந்து பார்த்தார்.
அத்துடன் தனது வருகையின் போது இலேசாயுத காலாட் படையணியின் மூத்த அதிகாரி ஒருவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக தலைமையக நிதி உதவிகளை வழங்கி வைத்தார். மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படையணிகளுக்கும் புதிய படைத் தளபதி அவர்கள் கடந்த மாதம் (24) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் புதிய படைத் தளபதி அவர்கள் 2 (தொ), 8 ஆவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரைகளை நிகழ்த்தினார். இவரை இந்த படையணியின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் நோக்கம் படையணிகளின் அனைத்து நிருவாக விடயங்களை மேற்பார்வையிடுவதும், அதிகாரிகள் மற்றும் படையினரது நல்வாழ்வை மேம்படுத்துவதாக விளங்குகின்றது. Running sport media | adidas Yeezy Boost 350