04th September 2020 10:59:47 Hours
இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த இராணுவ போர் கருவி பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் இலங்கை இராணுவத்தில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இச்சமயத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இராணுவ தளபதி அவர்கள் இராணுவ பழைய நினைவு எண்ணங்களை இந்த மூத்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியில் முக்கிய நியமனங்களை மேற்கொண்டதுடன் ‘ துரு மிதுரு – நவ ரடக்’ எனும் மரநடுகைத் திட்டங்களுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியதையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்துடன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இந்த மூத்த அதிகாரியவர்கள் இராணுவ தளபதியின் சிந்தனைகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு தனது கடமைகளை மேற்கொள்ளும் சமயத்தில் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்ட ஊக்கத்திற்கும் இராணுவ தளபதி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் இவராற்றிய சேவையை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Ανδρικά Nike