02nd September 2020 08:00:03 Hours
இலங்கை பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் பதவி நிலை பாடநெறி இலக்கம் 14 இல் பயிற்சி பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினெட்டு வெளிநாட்டு இராணுவ பயிலுனர் அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் 31 திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.
இவர்களை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் சார்பாக 9 ஆவது இலங்கை இராணுவ சமிஞ்சை படையின் கட்டளை அதிகாரி லெப்டிணட் கேணல் எமபீசிபி ஜயசாந்த அவர்களால் வரவேற்கப்பட்டனர். பின்னர், அவர்கள் ஆனையிறவு மறைந்த கோப்ரல் காமினி குலரத்ன (ஹசலக காமினி) நினைவுச் தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்போது 1 ஆவது இலங்கை சிங்க படையின் 2ம் கட்டளை அதிகாரி மேஜர் டி.கே.இ மடவல அவர்கள் ஆனையிறவில் மறைந்த கோப்ரல் காமினி குலரத்ன அவர்களின் தியாகத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இவர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக்க அவர்களின் சார்பாக 68 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்களால் வரவேற்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கரைவலை மூலம் மீன் பிடிக்கும் முறை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஒரு சிறப்பு விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலின் பின் பயணம் முடிவுக்கு வந்தது. Adidas footwear | Nike Shoes, Clothing & Accessories