03rd September 2020 13:30:30 Hours
'ஹோம் ஒப் கேட்டரியன்ஸ்' என்ற சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தின் வளாகத்தில் புதிய அதிநவீன கூடைப்பந்தாட்ட மைதானம், ஒரு புதிய பயிற்சி இடம் மற்றும் படைத் தளபதிகளுக்கான புதிய தளபதி வாசஸ்த்தலம் என்பன கஜபா படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இன்று 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டன.
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவரும், தேசிய விளையாட்டு கவுன்சிலின் உறுப்பினருமான லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் புதிய கூடைப்பந்தாட்ட மைதானத்தின் ஞாபகார்த்த பலகையினை திறந்து வைத்ததன் பின்னர் இராணுவத் தளபதி முன்னிலையில் உற்சாகமான கூடைப்பந்து கண்காட்சியும் இடம்பெற்றது.
அதன் பிறகு அன்றைய பிரதம அதிதி முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பயிற்சியாளர் விடுதியினை திறந்துவைத்தார், இது மேஜர் ஜெனரல் (ஓய்வு) லாரன்ஸ் பெர்னாண்டோ அவர்கள் படையணியின் படைத் தளபதியாக பணியாற்றிய போது தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியாளர் விடுதியானது படுக்கைகள், விசிறிகள், சலவை இயந்திரங்கள், குளியல் அறைகள், தொலைக்காட்சி அறைகள் கொண்ட நான்கு நேர்த்தியான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 400 பயிற்சியாளர்களுக்கு இடவசதியை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக படைத் தளபதியின் புதிய வாசஸ்த்தலம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டார். நிகழ்வில் கவுன்சில் உறுப்பினர்கள் , சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துக்கொண்டனர். bridgemedia | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp