Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2020 09:52:03 Hours

இதுவரை 2 இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் – கொவிட் மையம் தெரிவிக்கின்றது.

இன்று (02) காலை அறிக்கையின் படி இலங்கையில் மேலும் 43 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 43 நபர்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்களாவர். இவர்களில் தோஹா கட்டரில் இருந்து வருகை தந்து விடத்தல்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் 24 பேர், பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் 3 பேர், நீர்கொழும்பு அமகி ஆர்யா ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர், அனுராதபுர சீ லேன்ட் லொட்ஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவரும், குவைட் நாட்டில் இருந்து வருகை தந்த 5 பேர், இரணைமடு விமான படை தனிமைபடுத்தல் மையத்தில் 4 பேர் மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவரும், மாலைத்தீவில் இருந்து வருகை தந்து கொக்கல லோங் பீச் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 06 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்து ரன்டெம்பே தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவரும், ஹிக்கடுவ லங்கா சூப்பர் கொரல் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் ஒரு இந்திய கடற்படை சிவில் மார்ஷலும் உள்ளடங்குகின்றனர் என கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (02) காலை 6.00 மணியளவில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்கள் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து EK 648 விமான மூலம் சிவில் கடற்படை அதிகாரிகள் 29 பேரும் மற்றும் 57 பயணிகளுடன் தோஹா கத்தாரிலிருந்து விமானம் க்யூஆர் 668 ஆகியன ஊடாக கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு தினத்தில் (02), பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் 402 பேர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர். அவர்களில், கல்பிட்டி ருவல தனிமைப்படுத்தல் மையத்தில் 04 பேர், நிபுன பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மையத்தில் 05 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் 06 பேர் , டொல்பின் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 45 பேர், புலு ஜெட்வின் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் 07 பேர், மவுன்ட் லாவினியா ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 7 பேர், ஜெட்வின் லகோன் தனிமைப்படுத்தல் மையத்தில் 73 பேர் மற்றும் புனானி தனிமைபடுத்தல் மையத்தில் 255 பேர் என ஆகும்.

அதேபோல் இன்று 02 ம் திகதி காலை வரை 35,338 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 70 தனிமைபடுத்தல் மையங்களில் 7,990 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று 01ம் திகதி மட்டும் 1810 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 228,052 ஆகும்.

இன்று 02 ஆம் திகதி அதிகாலை வரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 624 நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் மேலும் 15 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். Nike sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov