01st September 2020 08:19:17 Hours
பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதினெட்டு வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், இலங்கையில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தற்போது பதவி நிலை பாடநெறி எண் 14 இன் பயிற்சிபெறும் 14 பேர் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.
இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார சார்பாக யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களின் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுப்பயணத்தில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் குறிப்பாக மே 2009 க்கு முன்னர் சமாதான போருக்கு நடவடிக்கையின் போது அவர்கள் அளித்த பங்களிப்பு தொடர்பாக அந்தந்த பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து தனித்தனி விளக்கங்களைப் பெற அவர்களுக்கு உதவியது. இந்த சந்திப்பானது இவர்களுக்கு கல்வி கற்பித்ததுடன் நடவடிக்கைக்கு பின்னர் பிந்தைய சூழ்நிலை மற்றும் படையினர்கள் எவ்வாறு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளன என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டன
அத்துடன் அவர்கள் புறப்படுவதற்கு முன்னர், யாழ் குடாநாட்டை பார்வையிட்டனர். Buy Sneakers | Sneakers