28th August 2020 09:23:36 Hours
அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் 591 ஆவது பிரிகேட் தலைமையகத்திற்கு (26) புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படைத் தலைமையகத்திற் வருகை தந்த படைத் தளபதியை 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 591 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி கேணல் சுஜீவ பெரேரா உட்பட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை பட்டாலியனின் கீழ் பணியில் இருக்கும் கட்டளை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.
பின்னர், கேர்ணல் சுஜீவ பெரேரா அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் படைத் தளபதிக்கு அப் பிரதேசத்தில் அவர்களின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
பின்னர், மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் படையினர்களுக்கு உரையாற்றியதுடன், 24 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் அவர்களின் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் பார்வையிட்டார். affiliate link trace | Nike Releases, Launch Links & Raffles