Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2020 18:47:42 Hours

வன்னி படையினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளிக்கு கையளிப்பு

மிகிந்தலை பிரதேசத்தில் வசிக்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வன்னி படையினரின் ஏற்பாட்டில் 20 ஆவது புதிய வீடு நிர்மானித்து வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களினால் இம் மாதம் (28) ஆம் திகதி பயனாளிக்கு கையளிக்கப்பட்டன.

சிங்கப்பூரிலுள்ள நன்கொடையாளியான திருமதி நிலந்த லியனகே அவர்களது நிதியுதவியுடனும், 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களது பூரன ஏற்பாட்டில் இந்த புதிய வீட்டு கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்து வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மிகிந்தலை மக்கிச்சாவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி ஏ.எஸ் குமுதினி அவர்களுக்கு இந்த புதிய வீட்டின் திறப்பு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் கையளிக்கப்பட்டன.

இந்த புதிய வீட்டின் கட்டிட நிர்மான பணிகள் 21, 212 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 7 (தொ) இலங்கை படைக்கலச் சிறப்பணியினால் மேற்கொள்ளப்பட்டன. இந்த வீட்டு நிர்மான பணிகள் நிறைவு செய்து பயணாளிக்கு இந்த வீடு கையளிக்கும் நிகழ்வின் போது இந்த வீட்டு உரிமையாளருக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் பரிந்துரைப்பின் பிரகாரம் அத்தியாவசிய பொருட்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவில் இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு திட்டங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவோடு வாழ்வாதாரத்தில் குறைந்த குடும்பத்தினருக்கான இந்த நலன்புரி வீடமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பயனாளிகளுக்கான வீடு கையளிப்பு நிகழ்வின் போது 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், 21 ஆவது படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரி, 7 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, குடும்ப அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Nike Shoes, Sneakers & Accessories