29th August 2020 09:30:36 Hours
இன்றைய (30) ஆம் திகதி அறிக்கையின் படி ஆறு நபர்களுக்கு கொவிட் – 19 கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் (4) பேர், ஐக்கிய இராஜ்நியம் (1) நபர் மற்றும் லெபனான் (1) ஆகிய நாடுகளில் இருந்து வந்த அறுவரும் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பிட்டிபனவில் உள்ள இலங்கை இராணுவ பொது சேவை படையணி தனிமைப்படுத்தல் மையம் ஆகியவற்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (30) ஆம் திகதி 0600 மணி வரைக்குள் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்களில் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் ஒரு நபர் உட்பட நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து IQ 4227 விமானத்தின் மூலம் 21 பயணிகளும், துபாயில் இருந்து EK 648 விமானத்தின் மூலம் 08 பயணிகளும், தோஹா கத்தாரில் இருந்து QR 668 விமானத்தின் மூலம் 42 பயணிகளும் மற்றும் UL 226 விமானத்தின் மூலம் துபாயிலிருந்து 272 பயணிகளும் இன்று (30) காலை கொழும்பு வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய (30) ஆம் திகதிக்குள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பின்னர் 551 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர். அவர்களில், 05 பேர் தியதலாவை தனிமைபடுத்தல் மையம், ஹோட்டல் ப்ளூ வேட்டர்ஸ் தனிமைபடுத்தல் மையம் 150 பேர், கொஸ்கம ஹோட்டல் ஷெராடன் தனிமைபடுத்தல் மையம் 161 பேர், காலி ஹோட்டல் அமரி தனிமைபடுத்தல் மையம் 05 பேர், திக்வெல்ல ரிசோர்ட் தனிமைபடுத்தல் மையம் 115 பேர், பியகம விலேஜ் தனிமைபடுத்தல் மையம் 94 பேர், மவுண்ட் லிவினியா ஹோட்டல் தனிமைபடுத்தல் மையம் 02 நபர்கள், பனிச்சங்கேனி தனிமைபடுத்தல் மையம் 14 நபர்கள் மற்றும் ஹோட்டல் ஜெட்விங் தனிமைபடுத்தல் மையம் 05 பேர் ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
அதேபோல், 34, 416 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 68 தனிமைபடுத்தல் மையங்களில் 7,286 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (29) திகதிக்குள், 1740 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகள் 221,910 ஆகும்.
இன்று (30) ஆம் திகதி அதிகாலை கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் பூரண சுகடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேரியுள்ளனர்.இவர்களில் 5 வெளிநாட்டைச் சேர்ந்த இலங்கையர் மற்றைய 02 பேரும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தொடர்புபட்டவர்களாவர். அதன்படி, கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 616 நபர்கள் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதுடன் 23 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) latest Nike Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4