24th August 2020 11:41:53 Hours
இன்று (24) காலை வரை மேலும் 6 நபர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கென்யாவிலிருந்து வருகை தந்து நீர்கொழும்பு வைத்தியசாலை தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள ஒருவர் , ஐக்கிய அரபு இராஐஐயத்தில் இருந்து வருகை தந்த 3 பேரில் பூசா தனிமைபடுத்தல் மையத்தில் (1), ஈடன் கார்டன் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் (2) மேலும் மலேசியாவிலிருந்து வருகை தந்து பசரை யுடிஎம்ஐ தனிமைபடுத்தல் மையத்தில் உள்ள இரண்டு பேர் உள்ளடங்குவர் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (24) காலை 6.00 மணி நிலவரப்படி கந்தகாடு போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 629 ஆகும். அவர்களில் 508 நபர்கள் புனர்வாழ்வின் கீழ் உள்ள புணர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்கள், 67 ஊழியர்கள், 5 விருந்தின ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் நோய் தொற்றுக்குள்ளாகிய நபர்களுடன் தொடர்புடைய 01 நபரும் அடங்குவர்.
மேலும் கத்தார் தோஹாவிலிருந்து QR 668 விமான மூலம் 20 பயணிகளும், இந்தியா அமீதாபாத்தில் இருந்து 6E 0191 விமான மூலம் 65 பயணிகள் கொழும்புக்கு வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை (24), பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 1212 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட உள்ளனர். அவர்களில், 10 பேர் நிபுன பூஸ தனிமைபடுத்தல் மையம், 18 பேர் மிஹிந்தலே தனிமைபடுத்தல் மையம், 26 பேர் கிளப் டொல்பின் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையம், 43 பேர் ஜெட்வின் பீச் தனிமைபடுத்தல் மையம், 1 நபர் பியகம கிராமத்தில் தனிமைபடுத்தல் மையம், 15 பேர் பேகன் பீச் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையம், 79 பேர் இராணுவ சேவை படையணியின் தனிமைபடுத்தல் மையம், 260 பேர் ஈடன் கார்டன் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையம், 31 பேர் ப்ளூ வேட்டர்ஸ் தனிமைபடுத்தல் மையம், 255 ஈகோ சர்ப் தனிமைபடுத்தல் மையம், 142 கொஸ்கொட ஷெரட்டன் தனிமைபடுத்தல் மையம், 178 பேர் கொக்கலா பீச் ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்திலிருந்தும் மற்றும் ராஜகிரியாவில் ஆயுர்வேத தனிமைபடுத்தல் மையத்தில் இருந்து 154 பேர் தங்கள் வீடுகளுக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுவரை, தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்னர் 31,541 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதேபோல், முப்படையினரால் நிர்வாகிக்கப்படும் 58 தனிமைபடுத்தல் மையத்தில் 7620 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (23) க்குள், 1610 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் 205,707 ஆக உயர்துள்ளன.
இதற்கிடையில், 07 கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளானவர்கள் பூரண குணமடைந்து இன்று (24) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர், அவர்களில் 2 பேர் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனை ஐந்து பேரும் கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்துடன்தொடர்புடையவர்கள். அதன்படி, கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 602 நபர்கள் பூரண குணமடைந்து இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மொத்தம் 27 நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். (முற்றும்) Asics footwear | Autres