Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2020 15:30:15 Hours

புதிய இராணுவ பயிற்சி கட்டளை தளபதி இராணுவ பயிற்சி நிலைய தளபதிகளுடன் கலந்துரையாடல்

புதிய இராணுவ பயிற்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா, அவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒருங்கிணைப்பு மாநாட்டின் போது இராணுவ பயிற்சி நிலையங்களின் அனைத்து நிலைய தளபதிகள் மத்தியில் உரையாற்றினார்.

இந் நிகழ்வின்போது அனைத்து நிலைய தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள் இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்தினரால் வரவேற்கப்பட்டதுடன், இந் விரிவுரையானது இராணுவ பயிற்சி கட்டளை தளபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. இராணுவ பயிற்சி கட்டளை தளபதியாக தனது கடமை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் அனைத்து பயிற்சி நிலைய தளபதிகளுடனும் உரையாடியது இதுவே முதல் முறையாகும்.

இந்த கலந்துரையாடலில் முக்கிய நிலைய தளபதிகள் கலந்துகொள்வதிலிருந்து பின்னூட்டங்களைப் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டன. இந்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த இராணுவ பயிற்சி கட்டளை தளபதி , இராணுவ பயிற்சி கட்டளை தளபதியாக இராணுவப் பயிற்சிப் நிலையங்களில் அனைத்து பயிற்சியின் செயல்திறனையும் வடிவமைக்க இராணுவ பயிற்சி கட்டளை தளபதியாக தொடங்கப்பட்ட செயல் திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இலங்கை இராணுவத்தை ஒரு தொழில்முறை அமைப்பாக மாற்றுவதில் அனைத்து தளபதிகளின் பங்கின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, அனைத்து இராணுவ பயிற்சி நிலையங்களின் அனைத்து படைத் தளபதிகள் / சி.ஐ.க்கள் விளக்கங்களை நடத்தி தங்கள் பரிந்துரைகளை இராணுவ பயிற்சி கட்டளை தளபதிக்கு அனுப்பினர். இராணுவ பயிற்சி கட்டளை தளபதி, இராணுவ பயிற்சி கட்டளையின் இலங்கை இராணுவப் பயிற்சி நிலையத்தின் வெற்றிக்கு தளபதிகள் அளித்த அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், பங்கேற்பாளர்கள் அனைவரையும் தொடர்ந்து பயிற்சி தொகுதிகள் மற்றும் இராணுவ பயிற்சி கட்டளை உடனான தொடர்புகளின் முக்கியத்துவத்தை மறுபரிசீலனை செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ‘தலைமைத்துவ பயிற்சி’ குறித்த இலங்கை இராணுவத்தின் திட்டத்தை இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 2020 செப்டம்பர் 02 முதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் இராணுவ பயிற்சி கட்டளை நியமனத்திற்கு கூடுதலாக, இராணுவ தலைமையகத்தின் பொது நிருவாக பணிப்பாளர் நாயகமாகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike sneakers | Air Jordan Release Dates 2020